TranslatorsCafé.com இன் முழுமையான பயன்பாட்டை அணுக நீங்கள் கட்டாயமாக ஒரு பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும். பதிவு இலவசம். பதிவு செய்த பின்னர், TranslatorsCafé.com இன் அடிப்படை வசதிகளை நீங்கள் பெற்றுக்கொள்வது இலவசம். முதன்மை உறுப்பினர் தளத்தின் முழுமையான வசதிகளை அணுக முடியும்.
நீங்கள் மொழி வல்லுநர் ஒருவராயின், உங்களது விபரக்கொத்து மற்றும் விண்ணப்பக் கடிதம் என்பவற்றை உருவாக்கிச் சேமித்து வைக்க முடியும் என்பதுடன் உங்களது தனிப்பட்ட வேலை தேடலை வழிபார்க்கவும் எங்களது தரவுத்திரட்டில் உள்ள முகவரகங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அணுகவும் முடியும். மேலும், நீங்கள் உங்களது முகவரகத்தையும் தரவுத்திரட்டில் சேர்க்க முடியும்.
நீங்கள் மொழிபெயர்ப்பு முகவரகப் பிரதிநிதி ஒருவராயின், உங்களது முகவரகத்தை TranslatorsCafé.com முகவரகத் தரவுத் திரட்டில் சேர்க்க அல்லது உங்களது முகவரகம் பற்றிய தகவல்களைச் செம்மைப்படுத்த மொழி வல்லுநர் ஒருவரின் சேவையை வேண்டும் வேலையொன்றை இட முடியும்.
நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழிபெயர்ப்பு முகவரகப் பிரதிநிதி ஒருவரல்லாமலும் வெறுமனே வேலை ஒன்றை இட வேண்டும் எனின் அல்லது திருப்தியடைந்த வாடிக்கையாளர் அல்லது வேலை வழங்குநர் என்ற அடிப்படையில் ஒரு பின்னூட்டமிட வேண்டின், நீங்கள் வேலை இடுநர் அல்லது வாடிக்கையாளர் ஒருவராகப் பதிவு செய்த பின்னர், அவ்வாறு செய்யலாம்.
நீங்கள் TranslatorsCafe.com இல் பதிவு செய்தால் பின்வரும் நன்மைகளைப் பெறுவீர்கள்:
பெருமளவிலான மேலதிக தகவல்கள். உதாரணமாக, வேலை இடுகைகளின் மின்னஞ்சல் முகவரிகள், மொழிபெயர்ப்பு முகவரகங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் பற்றிய கணிப்புக்கள் பதிவு செய்த பயனர்களுக்கு மாத்திரமே காட்டப்படும்.
சேவை வழங்குநர் ஒருவர் என்ற அடிப்படையில் உங்களது தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு உங்களது சொந்த, நெறிப்படுத்தப்பட்ட ஆட்பக்கம்.
http://உங்களதுபயனர்பெயர்.TranslatorsCafe.com என அமையும், ஞாபகிக்க வசதியான உங்களது சொந்த வலைத்தளம்.
உலக மட்டத்தில் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தல்.
மொழியியலாளர் தேடல் பெறுபேறுகளில் உள்ளடக்கப்படுதல்.
வேலைத் தளத்தில் வேலைகளை இட்ட வேலை வழங்குநர்களுக்கு உங்களது கேள்விமனுக்களை அனுப்ப முடியுமாதல்.
வேலைத் தளத்தில் வேலை ஒன்றை இட முடியுமாதல், கலந்துரையாடல்களில் பங்குபற்றல் மற்றும் TCTerms இல் கேள்வி கேட்டல்.
உங்களுக்கு ஒரு செயற்றிட்டம் வழங்கப்பட்டால், நீங்கள் TranslatorsCafe.com இற்கு எந்தக் கட்டணத்தையும் செலுத்த மாட்டீர்கள் — உங்களது வாடிக்கையாளர் உங்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்துவர்.
உங்களது ஆட்பக்கத்தை முன்னேற்றுவது பற்றிய சிபாரிசுகள்.
மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர் சேவை.
தன்னியக்கமான அறிவித்தல்கள்
TC வேலைத் தளம் மீது இடப்பட்ட வேலைகள்.
TC அரங்கங்களில் இடப்பட்ட செய்திகள்.
TCTerms இல் இடப்பட்ட கேள்விகள்.
இணையத்தில் காணப்படும் மொழி வல்லுநர்களினதும் குரல் வல்லுநர்களினதும் ஆகப் பெரிய தரவுத்திரட்டில் நீங்களும் ஒரு பகுதியாவீர்கள்.
உங்களது ஆட்பக்கத்தின் ஊடாகவே கட்டணங்களைப் பெற்றுக்கொள்ள PayPal, Moneybookers—Skrill மற்றும் Western Union பொத்தான்கள்.
நீங்கள் சேவையைப் பெற்றுக்கொண்ட முகவரகங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் பற்றி பின்னூட்டமிடல் மற்றும் உங்களது சேவையைப் பெற்றுக்கொண்ட ஆட்களிடமிருந்து அல்லது முகவரகங்களிடமிருந்து பின்னூட்டம் பெறல்.
பிற்செயலிகள் உங்களது இணைய உலாவியினால் ஏற்கப்படாவிடத்து இந்த வலைத்தளம் சரியாக இயங்காது என்பதை தயவு செய்து கவனிக்க.
தயவு செய்து, நீங்கள் பின்வரும் கூற்றை வாசித்து அதனை ஏற்பதாயின் இந்தப் பக்கத்தின் கீழே உள்ள நான் ஏற்கிறேன் எனும் பொத்தானைச் சொடுக்குக.
எங்களது சேவைகளின் ஒரு பகுதியாக, TranslatorsCafé.com ஆனது உங்களது தன்விபரத்திரட்டு, விண்ணப்பக் கடிதம், உங்களது தேடல்கள், நீங்கள் வேலை செய்த முகவரகங்கள் பற்றிய உங்களது கருத்துக்கள் மற்றும் கணிப்புக்கள் போன்ற தனிப்பட்ட விபரங்கள் அல்லது நீங்கள் வேலைத் தளத்தில் இடக்கூடிய வேலைகள் பற்றிய தகவல்கள் போன்றவற்றையும் இடுவதற்கு உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்தத் தகவல்கள் கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநிலத்தின் மிஸ்ஸிஸ்ஸவுகா நகரில் அமைந்துள்ள பரிமாற்றியில் பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்தப்படும். நாம் அந்தத் தகவல்களை எந்தவொரு மூன்றாந் தரப்பினருக்கும் விற்கவோ விநியோகிக்கவோ மாட்டோம். நீங்கள் TranslatorsCafé.com தளத்தின் மூலம் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு உங்களது தன்விபரத்திரட்டையும் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப மட்டுமே வேண்டியிருப்பின், உங்களது தகவல்களை தனிப்பட்ட என்ற தேர்வுப் பெட்டியைப் பயன்படுத்தி அவற்றைத் தனிப்பட்டதாக வைத்திருக்க முடியும். அவ்வாறான நிலைமையில் நீங்களும் TranslatorsCafé.com இன் பணிக்குழுவும் மாத்திரமே அந்தத் தகவல்களை அணுக முடியும். நீங்கள் பொதுப்பட்ட எனும் தேர்வுப் பெட்டியைப் பயன்படுத்தி உங்களது தன்விபரத்திரட்டு பொதுப்பட்டதாயிருக்க வேண்டின், எந்தவொரு மூன்றாந் தரப்பினரும் எங்களது பரிமாற்றியுடனான அவர்களின் செயற்பாட்டுக் காலத்தின்போது அவற்றை அணுக முடியும். எவ்வாறெனினும், உங்களது ஆட்பக்கத்தின் மூலம் செய்தி அனுப்புவதற்கு ஒரு விசேட இணையவழி படிவம் பயன்படுத்தப்படும் என்பதால், உங்களது மின்னஞ்சல் முகவரி இணையத்தில் வெளியிடப்பட மாட்டாது. எப்போதேனும் நீங்கள் உங்களது தனிவிபரத்திரட்டு மற்றும் ஏனைய தகவல்கள் எங்களது தரவுத்திரட்டிலிருந்து அகற்றப்பட விழைந்தால், நீங்கள் என் TranslatorsCafé.com என்ற பகுதியில் அமைந்துள்ள எனது ஆட்பக்கத்தைத் தரவுத்திரட்டிலிருந்து நீக்கு என்பதனைப் பயன்படுத்தி அவ்வாறு செய்ய முடியும்.
எவ்வாறாயினும், நீங்கள் உங்களது தன்விபரத்திரட்டையும் விண்ணப்பக் கடிதத்தையும் யாதாயினும் மூன்றாந் தரப்பினருக்கு அனுப்பும்போது, உங்களது சமர்ப்பிப்பு அவர்களது தனியுரிமைக் கோட்பாடுகளுக்கு அமைவானதாகும் என்பதை தயவு செய்து கவனிக்க. அவ்வாறான நிலைமையில், TranslatorsCafé.com தளத்திற்கும் TranslatorsCafé.com இன் கட்டுப்பாட்டுக்கும் வெளியில் உங்களது தன்விபரத்திரட்டும் விண்ணப்பக் கடிதமும் செல்லும். உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க TranslatorsCafé.com முடியுமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தியபோதும், உங்களது தனிப்பட்ட தகவல்கள் TranslatorsCafé.com இன் கட்டுப்பாட்டுக்கு வெளியே சென்ற பின்னர் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. TranslatorsCafe.com தளத்திற்கு தேடுபொறிகள் வழமையாக வருகை தருகின்றன. அவை தங்களுடைய சொந்தப் பரிமாற்றியில் நீங்கள் உங்களது ஆட்பக்கத்தில் இட்டுள்ள உங்களது பெயர், படங்கள், பொதுப்படப் பார்வையிடக்கூடிய ஏதேனும் எழுத்துப் பகுதிகள் மற்றும் உங்களைத் தொடர்புகொள்ளும் முறைகள் உட்பட ஆட்பக்கங்களுடைய உள்ளடக்கங்களைப் பிடித்து வைக்கின்றன. ஏதேனும் பகுதிகள் தேடுபொறிகளால் அகற்றப்படுதலுக்கு நாம் பொறுப்பாளிகளல்ல. எந்த வேளையிலும் எவருக்கும் நாம் உங்களது தனிப்பட்ட தகவல்களை விற்கவோ வழங்கவோ மாட்டோம் என்பதை தயவு செய்து கவனிக்க.
நீங்கள் முகவரகக் கணித்தல்களில் பங்குபற்றியிருத்தல், வேலைத் தளத்தில் வேலைகளை இட்டிருத்தல் அல்லது அரங்கங்களில் செய்திகளை இட்டிருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பின் கணித்தல், அரங்கம், TCTerms கேள்விகளும் பதில்களும் மற்றும் வேலை இடுகைகள் முதலியன ஆளடையாளமற்றிருக்க முடியாதன என்பதையும் தயவு செய்து கவனிக்க. அவ்வாறான நிலைமையில், நீங்கள் தரவுத்திரட்டிலிருந்து என் ஆட்பக்கத்தை நீக்கு எனும் பொத்தானைச் சொடுக்கிய பின்னரும் உங்களது பெயரும் முகவரியும் தரவுத்திரட்டில் மீதமாயிருக்கும். எனினும், அவை மொழியியலாளர் தேடல் பெறுபேறுகளில் காட்டப்பட மாட்டா.
நீங்கள் எங்களது வலைத்தளத்தின் தனியுரிமைக் கோட்பாடு மற்றும் பயன்பாட்டு விதிகள் என்பவற்றை ஏற்றுக்கொண்டால், தயவு செய்து நான் ஏற்கிறேன் எனும் கீழுள்ள பொத்தானைச் சொடுக்குக. பதிவுக்கான படிவத்தை நிரப்புவதன் மூலமும் நான் ஏற்கிறேன் எனும் பொத்தானைச் சொடுக்குவதன் மூலமும் பயன்பாட்டு விதிகள் எனும் பக்கத்திலுள்ள பயனர் ஒப்பந்தம் கொண்டுள்ள அனைத்துப் பந்திகளுக்கும் மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கும் நீங்கள் உங்களது இணக்கத்தைத் தெரிவிக்கிறீர்கள்.